தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோன்க்கு திடீரென முத்தம் கொடுத்த இயக்குனர்.! வைரலாகும் புகைப்படங்கள்!!

கோவில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோன்க்கு திடீரென முத்தம் கொடுத்த இயக்குனர்.! வைரலாகும் புகைப்படங்கள்!!

Director oom ravath kiss to keerthi sanon in tirupathi Advertisement

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அவரது நடிப்பில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். ஆதிபுருஷ் திரைப்படம் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ளது.

இதில்  ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

Ohm raut

இந்நிலையில் நேற்று திருப்பதியில் ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை ஆதிபுருஷ் பட இயக்குனரும், நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின் நடிகை கீர்த்தி சனோன் கிளம்பியபோது சட்டென இயக்குனர் ஓம் ராவத் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ohm raut #Keerthi sanon #Kiss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story