அடப்பாவமே.. சோற்றுக்குகூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் சங்கரின் உதவி இயக்குநர்..! தெருவுக்கு வந்தும் கனவு நீங்கவில்லை..!!
அடப்பாவமே.. சோற்றுக்குகூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் சங்கரின் உதவி இயக்குநர்..! தெருவுக்கு வந்தும் கனவு நீங்கவில்லை..!!
சினிமா வாய்ப்புக்காக தங்களது சொந்த ஊர்களைவிட்டு சென்னைக்கு வந்தவர்கள் மிக அதிகம். அப்படி வாய்ப்பு தேடிவந்தவர்கள் சிலர் சினிமாவில் ஜொலித்தாலும், சொந்த ஊரை மறந்து வாய்ப்புதேடி சென்னை வந்தவர்கள் பலரும் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் சுற்றி திரிவதை காணமுடியும்.
நடிகை லட்சுமி ராயை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வேந்திரன் இன்று ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் கடந்த 1982-ஆம் ஆண்டு கோவையில் இருந்து புறப்பட்டு சினிமா கனவோடு சென்னை வந்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரமுயற்சித்தும் பயனில்லாமல் போனதால், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தியன், காதலன், ஜீன்ஸ் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வந்திரன் மிகுந்த கஷ்டத்துடன் 2009-ஆம் ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் அந்தளவு வரவேற்பு பெறவில்லை. தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். மேலும் சென்னையில் கிடைத்த இடத்தில் தங்கி கிடைக்கும் உணவை உண்டு வாழ்கிறார்.
மேலும் சினிமா தான் தனது வாழ்க்கை என்றும், நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் போராடுவேன் என்றும், அதுவரை தனது ஊருக்கு போகமாட்டேன் என்றும் செல்வேந்திரன் கூறியுள்ளார். இது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவைத்துள்ளது.