இயக்குனர் சங்கரின் அடுத்த படம், படத்தின் ஹீரோ யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!
Director sankar next movie and hero details goes viral
இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இவர் இயக்கிய எந்திரன், 2 .0 போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்று தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியது.
தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் சங்கர் பிசியாக உள்ளார். இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தொடக்கத்திலையே பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தற்போது படப்பிடிப்பு தொடருமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் இயக்கினார் சங்கரின் அடுத்த படம் மற்றும் படத்தின் ஹீரோ குறித்த தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில், அர்ஜுன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் இயக்க உள்ளதாகவும், தளபதி விஜயை அதில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரபூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே தெரியும். இதுமட்டும் உண்மையானால் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கின்றது.