குற்றப்பரம்பரை நாவலை தழுவி உருவாகும் வெப் சீரிஸ்: சசிகுமார் இயக்கவுள்ளதாக தகவல்.!
குற்றப்பரம்பரை நாவலை தழுவி உருவாகும் வெப் சீரிஸ்: சசிகுமார் இயக்கவுள்ளதாக தகவல்.!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிகுமார், எப்போதும் தமிழக மக்களுக்கு தனது தரமான படைப்புக்களை வழங்குவதில் வஞ்சக செய்தது இல்லை.
நடிப்பதிலும் அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து விடுவார். இவரின் சுப்பிரமணியபுரம் திரைப்படம் தரமான படைப்பாக இன்று வரை நிலைக்கிறது.
இந்நிலையில், குற்றப்பரம்பரை நாவலை தழுவி எடுக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றை சசிகுமார் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதில் கூடுதல் தகவலாக சசிகுமாரின் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிசில் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார்.