என்ன ஒரு முட்டாள்தனம்.. பொய் சொல்லிட்டோம்! நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஆயிரத்தில் ஒருவன் பட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!!
கடந்த 2010 ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆயிரத
கடந்த 2010 ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். 12 ஆம் நூற்றாண்டின் சோழ பின்னணியை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் பலரும் இயக்குனர் செல்வராகவனின் அசத்தலான முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் சாதனை படைக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த ரகசியம் ஒன்றை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடி தான். ஆனால் அதனை நாங்கள் ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காக ரூ.32 கோடி பட்ஜெட் படமாக அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்.. படம் உண்மையான பட்ஜெட் தொகையை வசூல் செய்திருந்தாலும் அது சராசரியான வசூல் எனவே கருதப்பட்டது. இதிலிருந்து என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.