அடேங்கப்பா! சைன்ஸ் பிக்சன் படத்தை இயக்கப்போகிறாராம் சங்கர்! இவர்தான் ஹீரோவாம்!
Director shankar science fiction movie updates
இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டம்தான். தனது ஒவொரு படத்திலும் அதை நிரூபித்து வருகிறார் இயக்குனர் சங்கர். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான 2 . 0 திரைப்டம் தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்றது. மேலும் தமிழ் சினிமாவில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமும் 2 . 0 தான்.
வித்தியாசமான படங்களை கொடுப்பதில் சங்கர் கைதேர்ந்தவர். தற்போது நடிகர் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்ற படம் என்பதால் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு சங்கர் என்ன படம் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படத்திற்கு பிறகு சைன்ஸ் பிக்சன் படத்தைதான் இயக்க உள்ளாராம் இயக்குனர் சங்கர். அதேநேரம் 3 . 0 படத்தை இயக்கவும் சங்கருக்கு ஆசை உள்ளதாம். ஆனால் ரஜினி நடித்தால் மட்டும்தான் 3 . 0 படம் எடுப்பேன் என்றும் கூறியுள்ளாராம் சங்கர்.
இந்நிலையில் அவர் அடுத்து இயக்க உள்ள சைன்ஸ் பிக்சன் படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் கதை ஹ்ரித்திக் ரோஷனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.