செம மாஸ் தகவல்! இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு.
Director siva next movie with super star rajinikanth
தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் போன்ற வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் சிவா. தொடர்ச்சியாக தல அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய சிவா அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என்ற கேள்விகள் பலநாள் இருந்தது.
இந்நிலையில் இயக்குனர் சிவா அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கப்போவதாகவும், சன் பிக்சர்ஸ் அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எந்திரன், பேட்ட போன்ற மெகாஹிட் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார், இசை அமைப்பாளர் யார் என்பது குறித்த செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.