25 வருட நட்பு., ஆனா துரோகம் செய்துவிட்டார்.. சினிமாவையே ஒதுக்கிவைத்துவிட்டேன் - பிரபல நடிகர் குறித்த உண்மையை உடைத்த இயக்குனர்..!!
25 வருட நட்பு., ஆனா துரோகம் செய்துவிட்டார்.. சினிமாவையே ஒதுக்கிவைத்துவிட்டேன் - பிரபல நடிகர் குறித்த உண்மையை உடைத்த இயக்குனர்..!!
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகராகவும் திகழ்கிறார். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்உலகிற்கு அறிமுகமான இவர், பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது என்றே கூறலாம். மேலும் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த பேட்டியில் முரளி குறித்து கூறியுள்ளார்.
அதில், "நடிகர் முரளியும், நானும் 25 வருட நண்பர்கள். அவர் நடித்த முதல் படத்திலிருந்து அவருடன் நான் பணியாற்றி இருக்கிறேன். அப்போதிலிருந்து எனக்கும், அவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். அப்படி இருந்தும் நான் எடுத்த படத்தின்போது அவர் ஒழுங்காக ஷூட்டிங் வரவில்லை.
தொழில் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். அந்த துரோகம் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் நான் சினிமாவை போடா என்று ஒதுக்கி வைத்து விட்டேன். நமக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் கூட கஷ்டத்தில் இருக்கும்போது மனவேதனையளித்தால் என்ன செய்வது?.
நான் 30 வருடம் சினிமாவில் இருந்தாலும் பத்து லட்சம்கூட சம்பாதித்து இருக்கமாட்டேன். பணத்திற்காக நான் சினிமாவில் இல்லை. அதன் மீது உள்ள காதலினால் மட்டுமே சினிமாவிற்கு வந்தேன்" என்று கூறியுள்ளார்.