முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் விஜய்! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படம்!
Director vijay baby photo viral
தமிழ் சினிமாவில் கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல் விஜய். அதனை தொடர்ந்து அவர் மதராசப்பட்டினம், தெய்வத்திருமள், தலைவா, சைவம், தேவி, வனமகன் உள்ளிட்ட பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தெய்வத் திருமகள் படத்தை இயக்கியபோது இவருக்கும், அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அதனைதொடர்ந்து இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்களது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இரு வருடங்களிலேயே விவாகரத்து செய்தனர்.
பின்னர் இயக்குனர் விஜய் கடந்த ஆண்டு சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் அவரது குழந்தையை கையில் ஏந்தியபடி மிகவும் உற்சாகத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.