எளிமையாக முடிந்த இயக்குனர் விஜய்யின் இரண்டாவது திருமணம்!! அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!!
director vijay second marriage
தமிழ் சினிமாவில் கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இப்படத்தை தொடர்ந்து அவர் பொய் சொல்ல போறோம், மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தேவி உள்ளிட்ட பல வெற்றி திரைபடங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையை 'தலைவி என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறார்.
இயக்குனர் விஜய், அமலாபாலை கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
மேலும் அதனைதொடர்ந்து அமலாபால் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த ஆடை படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இயக்குனர் விஜய் தற்பொழுது சென்னை மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் ராஜன் பாபு மற்றும் அனிதா ஆகியோரின் மகளாகிய ஐஸ்வர்யா என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் விஜயின் திருமண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.