பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்! மத்திய அரசு மற்றும் தணிக்கை குழுவிற்கு தாதா 87 இயக்குனர் விடுத்த பரபரப்பு கோரிக்கை!
படம் துவங்குவதற்கு முன்பு பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான டைட்டில் கார்டு போட வேண்டும் என இயக்குனர் விஜய் ஸ்ரீஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
சாருஹாசன் நடிப்பில் வெளிவந்து வெற்றிப் பெற்ற தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி மத்திய அரசு மற்றும் தணிக்கை குழுவிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்
படம் திரையிடுவதற்கு முன்பு டைட்டில் கார்டில் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பதற்கு எதிரான வாசகங்கள் இடம் பெறுவது போல், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் வன்கொடுமைகளுக்கு எதிரான வாசகங்களும் இடம் பெற வேண்டும்.
உலக சினிமா வரலாற்றிலேயே 2019 மார்ச் 1 வெளியான தாதா87 பட டைட்டில் கார்டில், பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம் என்ற வாசகத்தை பதிவிட்டோம். மேலும் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில், பெண் ஒருவர் கயவர்கள் சிலரால் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், அந்த கயவர்களுக்கு கொடூர தண்டனை கொடுப்பதையும் படமாக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.