விடாமுயற்சி திரைப்படத்தில் காமெடியனாக இவரா.? அய்யய்யோ வேண்டவே வேண்டாம் கதறும் அஜித் ரசிகர்கள்.!
விடாமுயற்சி திரைப்படத்தில் காமெடியனாக இவரா.? அய்யய்யோ வேண்டவே வேண்டாம் கதறும் அஜித் ரசிகர்கள்.!
சென்ற வருடம் அஜித்தின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அஜித்குமார் தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இந்த நிலையில், அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக சொல்லப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்பாராத விதமாக திடீரென்று அவர் அந்த திரைப்படத்திலிருந்து விலகியதால், அந்தத் திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக சொல்லப்பட்டது.
விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்ட அந்த திரைப்படத்தை, லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1-ம் தேதி அந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. இதன் பிறகு அந்த திரைப்படம் தொடர்பாக எந்த விதமான தகவலும் வெளியாகவில்லை. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகவே நினைத்தனர்.
அப்படி எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை. அஜர்பைஜானில் திரைப்பட குழுவினர் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பை தொடங்கினர். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ரெஜினா, த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையுடன், இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது யார்? என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மிக விரைவில் அவர் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித்தின் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சதீஷின் நகைச்சுவைக்கு யாருக்குமே சிரிப்பு வராது. அவரை ஏன் இதில் ஒப்பந்தம் செய்தனர்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.