ஜலபுலஜங்.. குத்தாட்டம் போட தயாரா! சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி!!
ஜலபுலஜங்.. குத்தாட்டம் போட தயாரா! சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் ஹீரோயினாக, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டான் படத்தில் அனிருத் பாடியுள்ள ‘ஜலபுலஜங்’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் நடனமாடுவது போன்று ப்ரமோ வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.