நடிகர் சூர்யா குணமடைய வேண்டும் என ரசிகர்கள் செய்த காரியம்.!
நடிகர் சூர்யா குணமடைய வேண்டும் என ரசிகர்கள் செய்த காரியம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது ஞானவேல் ராஜா மற்றும் யூ.வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த சூழ்நிலையில் இந்த திரைப்பட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவின் தோளில் கயிறு பட்டதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூர்யா, நேற்று உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். விரைவில் குணமடையுங்கள் என்ற உங்களுடைய செய்திகளுக்கு நன்றி நான் நன்றாக உணருகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் நடிகர் சூர்யா மிக விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சென்னை பாரிமுனையிலிருக்கின்ற காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.