உச்ச கட்டத்தை எட்டும் வைரமுத்து விவகாரம்! பாடகி சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
dont call my mother chinmayi angry
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் எனப் பல பிரபலங்கள் பெயர் அடிபட்டது.
இதில் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பாடகி சின்மயி வெளியிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக பாடகி சின்மயின் தாய் பத்மஹாசினி நேற்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து சின்மயி கூறுவதனைத்தும் உண்மை எனப் பதிலளித்தார். இன்று பாடகி சின்மயியும் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து இதுகுறித்த விளக்கங்களைக் கூறினார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தனது தாயாருக்கு போன் செய்து தொல்லை தருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் ‘பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் எனது வேண்டுகோள். எனது தாய்க்கு போன் செய்து இது தொடர்பான கேள்விகளைக் கேட்டு தொல்லை செய்யாதீர்கள். அவர் 69 வயது நிறைந்த முதியவர். அவரால் ஓரளவுக்குதான் மன அழுத்தத்தைத் தாங்கமுடியும். தயவு செய்து செய்து போன் செய்வதை நிறுத்துங்கள். நன்றி.’ என பதிவு செய்துள்ளார்.