×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஓ காவியா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஓ காவியா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் தான் காவியா மாறன். சென்ற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இவர் இணையதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். இதற்கு காரணம் தொடர்ந்து அவரை கேமராமேன் படம் பிடித்ததன் காரணமாக, அவர் டென்ஷன் ஆனது தான். ஆனாலும் காவியா மாறன் அமைதி காத்ததால் பார்வையாளர்கள் அனைவரும் அவரை நோட்டமிட தொடங்கினர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் காவியா மாறன், தமிழகத்தின் பிரபல அரசியல் குடும்பத்தின் பின்புறம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இருந்தாலும் கூட ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றுக் கொண்டதால், அவர் திடீரென்று வைரலானார் சன் குழுமத்தின் நிறுவனர்  கலாநிதிமாறனின் மகளான காவியா மாறன், கடந்த 2018-ஆம் வருடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைநகர் சென்னையில் பட்டப் படிப்பை முடித்த அவர், லண்டனிலுள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ முடித்தார். அதன் பின்னர் தன்னுடைய தந்தையோடு தொழில்களை கவனிக்க தொடங்கி விட்டார். அவர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற அதே ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டி வரையில் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் துபாயில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த பேட் கம்மின்சை 20 .50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதே போன்று உலகக் கோப்பை தொடரின்போது அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டையும் ஏலத்தில் எடுத்தார் காவியா மாறன்.

காவியாமாறனின் சொத்து மதிப்பு தற்போது 409 கோடி என தெரிய வந்திருக்கிறது. ஒரு தரவுகளின் அடிப்படையில் இது பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல காவியா மாறனின் தந்தை கலாநிதி மாறன் 19000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Sunriseshydrabath #Kavyamaran #Sunnetwork #kalanithimaran
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story