#RIPSrinivasaMurthy: டப்பிங் கலைஞர் சீனிவாசமூர்த்தி மரணம்; நடிகர் விக்ரம் மனதார இரங்கல்..!
#RIPSrinivasaMurthy: டப்பிங் கலைஞர் சீனிவாசமூர்த்தி மரணம்; நடிகர் விக்ரம் மனதார இரங்கல்..!
ஒரு மொழியில் வெளியாகும் திரைப்படங்களை மாற்று மொழியில் வெளியிடும் போது, அதனை மொழியாக்கம் செய்து வெளியிடுவது வழக்கம். இதற்கான பணிகளை செய்யும் டப்பிங் பணியாளர்களில் அஜித், விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோருக்கு தெலுங்கு மொழியில் டப்பிங் பணிகளை செய்யும் டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி.
இவர் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் பொருளாளரும் ஆவார். நேற்று அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமான நிலையில், அவரின் மறைவு டப்பிங் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரின் மறைவுக்கு நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த சூர்யாவின் ட்விட் பதிவில் கூறியுள்ளதாவது, "இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு! ஸ்ரீனிவாசமூர்த்தி காருவின் குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் ஐயா! சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்" என தெரிவித்துள்ளார்.
விக்ரமின் ட்விட் பதிவில், "நண்பர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் சீக்கிரம் மறைவு அதிர்ச்சியும் இதயத்தை உறையவைக்கும் வகையில் உள்ளது. அவரது காந்தக் குரல் தெலுங்கில் எனது கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையையும் அழகையும் அளித்தது. குறிப்பாக எங்கள் அந்நியன் பட பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. இது எப்போதும் அன்புடன் நினைவில் இருக்கும். நன்றி ஸ்ரீனிவாச மூர்த்தி" என தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் இரங்கல் ட்விட்:
நடிகர் விக்ரமின் இரங்கல் ட்விட்: