பாடகி சின்மயி அதை செய்யாததால் டப்பிங் யூனியனிலிருந்து அதிரடி வெளியேற்றம்!
Duping union dismissed singer chinmayie
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து #MeToo என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தது. தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கினர்.
இந்நிலையில் பாடகி சின்மயி கடந்தமாதம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தினார். இந்நிலையில் சின்மயி சினிமாவை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளார்.
சின்மயி பாடுவது மட்டுமின்றி படங்களில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசவும் செய்கிறார். அவரது குரலுக்கு ஏராளமாக ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவரை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் சின்மயி இனி டப்பிங் பேசவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
யூனியனில் மெம்பராக இல்லாத ஒருவர் சினிமாவில் டப்பிங் பேச முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி சின்மயி கடந்த இரண்டு வருடங்களாக கட்டணம் செலுத்தவில்லையாம். இதனாலயே அவரை டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
96 படம் தான் சின்மயி பணியாற்றிய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.