முத்த காட்சியுடன் முடிந்த ஆதித்ய வர்மா படப்படிப்பு! வைரலாகும் படப்படிப்பு வீடியோ
duruv relise last seen of aathiya varma
பிரபல நடிகரான விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தான் ஆதித்ய வர்மா.தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவார கொண்ட, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
அப்படத்தை தற்போது தமிழில் "ஆதித்யா வர்மா" என ரீமேக் செய்கின்றனர். அதில் துருவ்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் பனித்த சந்து நடித்துள்ளார். அண்மையில் வெளியான ஆதித்ய வர்மா படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் ஆதித்யா வர்மாவின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடித்துவிட்டது. தற்போது படப்பிடிப்பின் கடைசி தினத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.