பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தா ஒரு குடும்பமும் உருப்படாது! அதிரடி குற்றசாட்டை வைத்த தமிழகத்தின் முக்கிய பிரமுகர்! யார்னு பார்த்தீர்களா!
பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பமும் உருப்படாமல் போய்விடும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த ஒரு வாரமாக சீரமைப்போம் தமிழகத்தை என தொடர் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது அவர் அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் 70 வயதில் பிக்பாஸ் நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் நாட்டிற்கு நல்லது செய்ய கமல் வரவில்லை. நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒரு குடும்பமும் உருப்படாது என்றும், எம்.ஜி.ஆர். பட பாடல்களிள் எவ்வளவு நல்ல கருத்துக்கள் உள்ளது. கமல்ஹாசன் படங்களில், பாடல்களில் அப்படி ஏதாவது நல்ல கருத்துக்கள் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.