"அட்ஜஸ்ட்மென்ட் செய்றது, செய்யாதது அவ விருப்பம். உனக்கு என்னடா பிரச்சனை" தொகுப்பாளரை வறுத்தெடுத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.!
அட்ஜஸ்ட்மென்ட் செய்றது, செய்யாதது அவ விருப்பம். உனக்கு என்னடா பிரச்சனை தொகுப்பாளரை வறுத்தெடுத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாகும். முற்போக்கான கதைக்களத்தை கொண்ட இந்த சீரியலில் பிற்போக்கு கருத்துக்களையுடைய அண்ணன், தம்பிகளின் கதைகளையும், அவர்களின் மனைவிகளின் சவால்களையும், எடுத்துரைக்கும் கதைதான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் காயத்ரி. இவர் இதற்கு முன்பு 'அயலி' எனும் வெப் சீரிஸ் மூலம் தமிழில் பிரபலமானார். இந்த சீரியஸில் இவரின் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
இதுபோன்ற நிலையில், சினிமா துறையை பொறுத்தவரை வெள்ளித்திரை, சின்னத்திரை என பாரபட்சம் பார்க்காமல் அட்ஜஸ்ட்மென்டிற்கு கேட்கும் பலர் உண்டு. வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளிடம் அவர்களிடம் இருக்கும் திறமையை பார்க்காமல் படுக்கையறைக்கு கூப்பிடும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சினிமா துறையில்.
இதன்படி நடிகை காயத்ரி ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்கள் குறித்து பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அப்பேட்டியில் காயத்ரி கூறியதாவது, "அட்ஜஸ்ட்மென்ட் செய்யறதும் செய்யாததும் அவ விருப்பம், நடிக்கணும்னா அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சு தான் ஆகணும். அதுக்கு என்ன பண்ண முடியும் என்று பேட்டியில் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியிருக்கிறார்.