Only Boys: வெளியானது விமலின் EEMI படத்தின் கவர்ச்சி புகைப்படங்கள்
EEMI glamour photos released
விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விமல் -ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. காதல் - நகைச்சுவை படமான இதனை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகள் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
வரும் டிசம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில், ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான் ஆகியோருடன் போலீஸ் அதிகாரியாக பூர்ணா நடிக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை மியா ராய், ‘கன் பைட் காஞ்சனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் திரைக்கதை கவர்ச்சியும், நகைச்சுவையும் கலந்து உருவாகி இருக்கிறது. படுகவர்ச்சியான காட்சிகளில் நடிகை ஆஷ்னா சவேரி, துணிச்சலுடன் நடித்து இருக்கிறார். அந்தப் படத்தின் சில கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.