"வெட்டியாக ஊர் சுற்றி வாழ்க்கையை இழந்து கடவுளை பழிக்காதீர்கள்" - இயக்குனர் செல்வராகவன் இளம் தலைமுறைக்கு அட்வைஸ்.!
வெட்டியாக ஊர் சுற்றி வாழ்க்கையை இழந்து கடவுளை பழிக்காதீர்கள் - இயக்குனர் செல்வராகவன் இளம் தலைமுறைக்கு அட்வைஸ்.!
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன்.
இவர் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நிலையில், மோகன் ஜி-யின் ருத்ரதாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் பகாசூரன் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகுறியுள்ளது.
அவரின் ட்விட்டர் பதிவில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு "கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல“ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள். - அனுபவம்" என்று தெரிவித்துள்ளார்.