×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இஸ்லாமிய மதத்தை கைவிட்டு இந்து மதத்துக்கு மாறிய பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அலி அக்பர்.! பெயரையும் மாற்றிக்கொண்டார்.!

இஸ்லாமிய மதத்தை கைவிட்டு இந்து மதத்துக்கு மாறிய பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அலி அக்பர்.! பெயரையும் மாற்றிக்கொண்டார்.!

Advertisement

இந்திய முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 8-ந் தேதி  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான அலி அக்பர் இதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். 

அதில், நாட்டின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் மரணம் குறித்து தேவையற்ற கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எனது பதில் நான் முதலில் இந்தியன் என்பதுதான். எதிர்மறையாக கருத்து கூறி வருபவர்களுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காதது என்னை காயப்படுத்தியுள்ளது. அவர்களுடன் இனியும் இணக்காமாக செல்ல இயலாது என்று கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதத்தை விட்டு விலகுவதாகவும் அலி அக்பர் கூறினார். 

பிபின் ராவத் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தவர். எனவே அவரை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பதாகும். எனவே நான் இந்து மதத்துக்கு மாறுகிறேன். எனது பெயரை ராம் சிங் என மாற்றிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் இந்து மதத்துக்கு மாறுவதாக கூறி இருப்பது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ali Akbar #director
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story