பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்! சோகத்தில் திரை உலகம்!
Famous late actor vinoth kanna wife expired
மறைந்த இந்தி நடிகர் வினோத் கன்னாவின் முதல் மனைவி கீதாஞ்சலி (வயது70) திடீர் உடல்நலம் குறைவால் நேற்று மரணமடைந்தார்.
வினோத் கண்ணா 1968ஆம் ஆண்டு சுனில் தத் நடித்த மன் கா பிரீத் என்ற ஹிந்தி திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.அதே தொகுதியிலிருந்து 1999ஆம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 2002இல் இந்திய ஆய அமைச்சரவையில் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றினார். வினோத் கன்னா சிறுநீர் பையில் புற்று நோய் தாக்கி இருந்ததால் ஏப்ரல் 27 ,2017 இல் மரணம் அடைந்தார்.
வினோத் கண்ணா தனது முதல் மனைவி கீதாஞ்சலியை கல்லூரியில் சந்தித்தார். 1971 ஆம் ஆண்டில் கன்னா அவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தின் மூலம் ராகுல் மற்றும் அக்ஷய் பிறந்தனர். இருவரும் பாலிவுட் நடிகர்கள் ஆனார்கள். 1985 ஆம் ஆண்டில், கீதாஞ்சலியை விவாகரத்து செய்த கன்னா 1990ல் தொழிலதிபர் ஷரயு டஃப்தாரி மகளான கவிதா டஃப்தாரியை மணந்தார்.
இந்நிலையில் 70 வயதான கீதாஞ்சலி நேற்று மரணமடைந்தார். நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவரது மகனும், நடிகருமான அக்சய் கன்னா உடனடியாக தாயை சோன்டி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவர் மீண்டும் பண்ணை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அக்சய் கன்னா தாயை ஓய்வு எடுக்க சொல்லி விட்டு வெளியில் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த அக்சய் கன்னா தாயை பார்ப்பதற்காக அறைக்கு சென்றார். அப்போது, கீதாஞ்சலி படுக்கையில் பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கீதாஞ்சலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.