புதிய வேட்டையில் கெத்து காட்டும் தல அஜித்.! அசந்துபோய் கவிதையால் மாஸ் காட்டும் முக்கிய பிரபலம்!!
famous lyrict wish ajith
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.
சமீபத்தில் தல அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
இந்நிலையில் எப்பொழுதும் புதுபுது விஷயத்தை கற்றுக்கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டிவரும் அஜித் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். அந்த புகைப்படமும், வீடியோக்களும் சமூவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
கடந்த 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில், 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.இதில் நேற்று நடைபெற்ற நான்கு சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களை எடுத்து தல அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல பாடலாசிரியருமான எழுத்தாளர் அருண் பாரதி தனது டிவிட்டர் பக்கத்தில், துப்பாக்கி உடுத்திடும் ஆடையடா, தோட்டா நீ படித்திடும் கீதையடா என அஜித் குறித்த ஒரு கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.