டிக் டாக் பிரபலம் ரெமோ பாஸ்கரன் காலமானார்... வருத்தத்தில் ரசிகர்கள்.!
டிக் டாக் பிரபலம் ரெமோ பாஸ்கரன் காலமானார்... வருத்தத்தில் ரசிகர்கள்.!
இன்று சினிமா பிரபலங்களை தாண்டி டிக்டாக்கில் மூலம் பிரபலமடைந்து நிறைய பேர் இருக்கின்றனர். அந்த வகையில் டிக் டாக்கில் நகைச்சுவையான ரீல்ஸ் வீடியோகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாஸ்கரன்.
இவர் அதிக அளவில் காதல் பாடல்களுக்கு ரில்ஸ் செய்து வீடியோகளை வெளியிட்டதை அடுத்து செல்லமாக ரசிகர்கள் அவரை ரெமோ பாஸ்கரன் டாடி என அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து இண்ஸ்டாகிராமில் வீடியோகளை வெளியிட்டு வந்த பாஸ்கரனின் உயிரிழப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த பாஸ்கரனுக்கு ரசிகர்கள் தங்களது இரங்களை தெரிவித்து அவரது வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.