வலிமை பார்க்க திரையரங்கம் வந்த அஜித் குடும்பத்தினர்! ரசிகர் விடுத்த மாஸ் கோரிக்கை! ட்ரெண்டாகும் வீடியோ!!
வலிமை பார்க்க திரையரங்கம் வந்த அஜித் குடும்பத்தினர்! ரசிகர் விடுத்த மாஸ் கோரிக்கை! ட்ரெண்டாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்த திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இதில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா, சுமித்ரா, புகழ், சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் கடந்த
பிப்ரவரி 24 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவர்களது பிள்ளைகள் திரையரங்கிற்கு வருகை தந்து வலிமை படத்தை பார்த்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் அப்பொழுது ரசிகர் ஒருவர் ஷாலினிடம், ஹாய் மேடம் அஜித் சாரை கேட்டதாக கூறுங்கள் என கூறுகிறார். அதற்கு அவர் கையசைத்து செல்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.