அச்சச்சோ.. ராஷ்மிகாவுக்கே இந்த நிலையா?.. கோவிலில் அப்படி என்ன தான் நடந்தது?..! கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்..!!
அச்சச்சோ.. ராஷ்மிகாவுக்கே இந்த நிலையா?.. கோவிலில் அப்படி என்ன தான் நடந்தது..! கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்..!!
நடிகர் கார்த்திக்குடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடித்த புஷ்பா படம் பட்டிதொட்டியெங்கும் பரவி ரஷ்மிகாவுக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.
தற்போது வாரிசு, புஷ்பா 2 உட்பட பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிரபலமான ரஷ்மிகாவுக்கு புஷ்பா படம் பாலிவுட்டில் பிரதானமாக அறிய வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இருக்கும் விநாயகர் கோவிலில் ரஷ்மிகா சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனைக்கண்ட மக்கள் பலரும் அவரை காண குவிந்துள்ளானார். ரசிகர்கள் ராஷ்மிகாவுடன் கைகுலுக்க, செல்பி எடுக்க முண்டியடித்துள்ளனர். சிலர் அவரின் கைகளை பிடித்து, உடலை தொட்டு அத்துமீறவும் செய்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வெளியாகவே, சிலர் ராஷ்மிகாவுக்கே இந்த நிலையா? என கேட்டு வருகின்றனர். அத்துடன் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.