அடேங்கப்பா கலக்குறாரே! பத்மஸ்ரீ விருது பெறசென்ற பிரபுதேவாவின் உடையை கண்டு அசந்துபோன ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே.!
fans are excited to see the dress of prabudeva
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.
அதன்படி மலையாளநடிகர் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் விருது வழங்கி பெருமைபடுத்தினார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பத்மஸ்ரீ விருதை பெற நடிகர் பிரபுதேவா தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்தது நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.