மறுவெளியீடு செய்யப்பட படத்தைக் காண கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள்.. என்ன படம் தெரியுமா.?
மறுவெளியீடு செய்யப்பட படத்தைக் காண கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள்.. என்ன படம் தெரியுமா.?
இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1993ம் ஆண்டு மலையாத்தில் வெளியான திரைப்படம் "மணிச்சித்திரத்தாழ்". ஒரு காவிய திகில் திரைப்படமான இப்படத்தில் மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா, நெடுமுடி வேணு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப்படம் தான் தமிழில் பி.வாசுஇயக்கத்தில் ரஜினிக்காந்த், பிரபு, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் "சந்திரமுகி" என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் மலையாளத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ளது.
கேரளாவின் பண்பாட்டை குறிக்கும் வகையில் கேரள அரசு ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வான "கேரளீயம் 2023" நிகழ்வில் மலையாள கிளாசிக் திரைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படும். அதன்படி தற்போது "மணிச்சித்திரத்தாழ்" திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, படம் பார்க்க வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இரவு ஒரு காட்சி மீண்டும் திரையிடப்பட்டது. இதற்காக ரசிகர்கள் கொட்டும் மழையில் திரை அரங்குகளில் வரிசையாக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.