பார்த்ததும் கண்ணீர் வரவைக்கும் வீடியோ! பார்த்ததும் உருகும் பார்வையாளர்கள்! வீடியோ இதோ.
Father daughter love actor vivek sema video
வளர்த்துவிட்ட இந்த நாகரிக உலகில் பலருக்கு தங்களை பெத்து வளர்ந்த பெற்றோரை பார்த்து பேசுவதற்கோ அல்லது அவர்களுடன் நேரம் செலவிடவோ நேரம் இல்லை. இதுகூட பரவாயிலை ஆசையாக பாலூட்டி, சோறுட்டி பாசமாக வளர்ந்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது, உணவு கொடுக்காமல், அடித்து கொடுமை படுத்துவது இப்படி பல கொடுமைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் பிள்ளைகள் தங்களின் வயதான பெற்றோர் மீது அனுப்புடனும், அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்று கூறி நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலரின் வரவேற்பை பெற்றுவருகிறது.
அந்த வீடியோவில் மகள் ஒருவர் தனது வயதான தந்தைக்கு பழைய உணவை தட்டில் வைத்து அதை அவரது கையில் கூட கொடுக்காமல் கோவமாக மேசை மீது தூக்கி போட்டுவிட்டு தனது அறைக்குள் செல்கிறார். நடுங்கும் கைகளோடு அந்த தந்தை எடுத்து உண்ண ஆரம்பிக்கிறார்.
அறைக்குள் செல்லும் மகள் அங்கு தனது கணவர் தனது மகளுக்கு ஆசையோடு உணவு ஊட்டுவதை பார்த்த அந்த பெண் தனக்கும் தனது தந்தை இப்படித்தானே உணவு ஊட்டியிருப்பார் என ஒருநிமிடம் நினைத்து பார்க்கிறார். அவரது கண்ணில் கண்ணீர் வருகிறது. உடனே அங்கிருக்கும் நல்ல உணவுகளை தனது தட்டில் அள்ளிப்போட்டுக்கொண்டு தனது தந்தையை நோக்கி செல்கிறார்.
அங்கு தனது தந்தை உண்ணும் பழைய உணவை தள்ளிவைத்துவிட்டு சுவையான உணவை மேசையில் வைத்து தனது தந்தைக்கு ஊட்டிவிட முயற்சிக்கிறார், அவர் உணவை மேசையில் வைத்ததுமே அதை ஸ்பூனில் எடுத்து தனது மகளுக்கு ஊட்டிவிடுகிறார் அந்த தந்தை.
இந்த காட்சியை வீடியோவாக பார்க்கும் ஒவொருவருக்கும் நிச்சயம் கண் கலங்கும். இதோ அந்த வீடியோ.