நடிகர் விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த நடிகர் யார் தெரியுமா?
Favorite actor of vijay son sanjay
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அத்தியாயம் தல மற்றும் தளபதி. இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. சில சமயங்களில் இவர்கள் ரசிகர்கள் அடித்துக்கொள்வதும், சமூக வலைத்தளங்களில் வார்த்தை போர் நடைபெறுவதும் வழக்கம்தான். ஆனால் விஜய் அஜித் இருவருமே நல்ல நண்பர்கள்தான்.
நடிகர் விஜய்க்கு ஷாஷா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. என்னதான் விஜய் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் அவர்களது குழந்தைகளுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருக்கும்.
இந்நிலையில் விஜய் மகனிடம் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சய், எனக்கு அப்பா (விஜய்), விஜய்சேதுபதி மற்றும் அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அஜித் அங்கள் செய்யும் பிரியாணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தல என்றால் கெத்து தான் என்று தெரிவித்துள்ளார். சஞ்சயின் இந்த பதில் அஜித் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.