பேட்ட படத்தினை விளம்பரம் செய்ய அடிமட்டத்துக்கு இறங்கிய சன் பிக்சர்ஸ்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Free promotion of petta through new still
வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் புரோமோசனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய புதிய முறையில் செய்து வருகிறது. இன்று செலவே இல்லாமல் இந்த புரோமோசனை செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’.இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியானது. மேலும் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேட்ட படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை வெளியிட போவதாக ஒரு ட்வீட் செய்தது. மேலும் அந்த ஸ்டில்லை பார்க்க வேண்டுமானால் அந்த ட்வீட்டை 1000 முறை ரீடுவீட் செய்ய வேண்டும் என அறிவித்தது. இப்படியாக படத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்வது என பலர் கமென்ட் செய்துள்ளனர்.
மேலும் 1000 ரீடுவீட்டை தாண்டி சென்றும் சன் பிக்சர்ஸ் அந்த புதிய ஸ்டில்லை வெளியிடவில்லை. இதற்காகவும் பலர் கோபத்தில் திட்டி தீர்த்துள்ளனர். இறுதியாக 1500 ரீடுவீட்டை அடைந்ததும் அந்த சுமாரான ஸ்டில்லை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.