கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் ஒரேநாளில் ரூ.186 கோடி வசூல் செய்துள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer). ராம் சரண் தெலுங்கு & தமிழில் நடிக்கும் இத்திரைப்படம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. தமன் இசையில் படம் உருவாகியுள்ளது. 10 ஜனவரி 2024 அன்று படம் உலகளவில் வெளியானது.
இதையும் படிங்க: கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் வெளியீடு; ஆக்சன்-அரசியலில் கலக்கும் ராம்சரண்.! எஸ்ஜே சூர்யா மாஸ் சம்பவம்.!
எஸ் ஜே சூர்யா கவனத்தை பெறலாம்
கேம் சேஞ்சர் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில், அரசியல், ஆக்சன் என அதிரடியாக உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில், நடிகர் எஸ்ஜெ சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து வெளியான மாநாடு, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை அடைந்தது. அதேபோல, கேம் சேஞ்சரிலும் அவரின் நடிப்பு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரேநாளில் ரூ.180 கோடி வசூல்:
ரூ.350 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், ஆந்திர அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ் ஜெகன் மோகனின் ஆட்சியை பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் ஆகிய கட்சிகள் இணைந்து அகற்றி, இன்று நடிகர் பவன் கல்யாண் அம்மாநிலத்தில் துணை முதல்வராக இருக்கிறார். பவன் கல்யாணின் குடும்பமும், ராம் சரண் குடும்பமும் நெருங்கிய சொந்தங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் ஒரேநாளில் ரூ.186 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: #JustIN: அரசியல் கட்சியில் நேரில் வந்து இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி ட்விஸ்ட்.!