செப்டம்பரில் வெளியாகிறது கேம் சேஞ்சர் திரைப்படம்; ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த தில் ராஜு.!
செப்டம்பரில் வெளியாகிறது கேம் சேஞ்சர் திரைப்படம்; ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த தில் ராஜு.!
நடிகர்கள் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர்.பிரம்மாண்டங்களின் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் படம் தயாராகி வருகிறது.
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தமன் இசையில் படம் உருவாகியுள்ளது. இப்படம் 2024ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படம் வெளியாகும் தேதி குறித்த தகவலை தில் ராஜுன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, படம் செப்டம்பர் 2024ல் வெளியாக தேவையான பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.