கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!
கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட நபராக வலம்வருபவர் கங்கை அமரன். இவரின் இயக்கத்தில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், கோவில் காளை உட்பட பல்வேறு படங்கள் காலங்கள் கடந்த பெருமையை தக்கவைத்து இருக்கிறது.
40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 10 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதிலும் இடம்பெற்று இருக்கிறார். தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கங்கை அமரன், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ஒருசில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தனுஷின் இட்லி கடை பட பர்ஸ்ட்லுக் வெளியீடு; லிங்க் உள்ளே.!
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், நடிகர் கங்கை அமரன் சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்று இருந்தார். அங்கு திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, கங்கை அமரன் தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். எப்போதும் உற்சாகம் மிகுந்த இளைஞனைப்போல சுற்றிவந்த கங்கை அமரன், வயது மூப்பு சார்ந்த உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டு நலிவுற்று இருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!