உங்களுடைய படம் தோர்த்துவிட்டால் நீங்கள் தற்கொலை செய்துகொள்வீர்களா? பா.ரஞ்சித்தை கேள்வி கேட்ட பிரபல நடிகை!
Gayathri Raguram talk about ranjith
நாடு முழுவதும் 156 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்களில், தேசிய அளவில் 56.50% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் தமிழக மாணவர்கள் 59 ஆயிரத்து 785 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சுருதி என்ற மாணவி முதலிடத்தையும், தேசிய அளவில் 57 வது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வைஷியா என்ற மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து இயக்குனர் ப.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில்,“நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போது ரிதுஸ்ரீ, வைஷ்யா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு, நீட் என்ற கொள்கையை சட்டமாகக் கொண்டிருக்கும் மத்திய அரசு, அதைத் தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம்... இவர்கள்தான் இதை நிகழ்த்தியவர்கள்!” என தெரிவித்துள்ளார்.
அவரது பதிவிற்கு நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “ஒரு படம் தோல்வியடைந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ள நினைப்பீர்களா? இல்லை, அடுத்த படத்தை நன்றாகச் செய்ய முயற்சிப்பீர்களா? அல்லது படங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று போராடுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.