கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சுட்டிப்பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
gilli movie bhuvana how is she now

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை நான்சி ஜெனிஃபர்.
கில்லி பாடத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி தற்பொழுது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார். இவர் சின்னவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நான்சி ஜெனிஃபர் சின்ன வயதில் சக்தி, நேருக்கு நேர், உளவுத்துறை, கண்மணி உனக்காக போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் சுட்டி பெண்ணாக நடித்திருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
வளர்ந்த பிறகு சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை காட்ட தொடங்கியுள்ளார். இவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் புவனாதான் இந்த நடிகை? இவ்வளவு அழகா இருக்கின்றாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.