மாஸ்க் போடலைனா அபராதமா? நானும் ரவுடிதான்..நடுரோட்டில் போலீசாரிடம் செம தெனாவட்டாக,நைட்டி ஆண்டி செய்த அலப்பறை!
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனோ வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் த
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனோ வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையாக தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. மேலும் தமிழகத்திலும் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு, முகக்கவசம் அணிய வேண்டும் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெண் ஒருவர் மாஸ்க் போடாமல் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இந்த நிலையில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார் 200 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இத்துனூண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் அபராதம் கட்ட சொல்றீங்க. உனக்கு அசிங்கமா இல்லையா? என்ன மரியாதையில்லாமல் பேசியுள்ளார். அதற்கு காவலர் அதை கலெக்டரிடம் போய் கேளுமா என கூற, அந்த பெண் யோவ் கலெக்டரை கூப்பிடு. நானே கேட்கிறேன். யாரா இருந்தாலும் மானத்தை வாங்கிடுவேன் என மோசமாக பேசியுள்ளார்.
மேலும் இதனை வீடியோ எடுத்த காவலரிடம், வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுவியா போடு.. ஜெயில்ல போடுவியா போடு.. நானும் ரவுடி தான் என மிரட்டும் தோனியில் தெனாவட்டாக பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவமரியாதையாக பேசிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.