நடுவானில் பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண் ! பின் நடந்தது என்ன? வெளியான ஆச்சர்ய தகவல்!
girl give birth in flying flight
தோகாவில் இருந்து பாங்காங் நோக்கி சென்ற விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பறக்கும் விமானத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கத்தார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான QR-830 என்ற விமானம்,தோஹாவிலிருந்து பாங்காக் நோக்கி பயணம் செய்துள்ளது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 23 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பறக்கும் விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியிடம் அனுமதி கேட்கப்பட்டு, அந்த விமானம் அதிகாலை 03:09 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழு விரைவாக தாய் மற்றும் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு தாய் மற்றும் சேய் ஆகிய நலமுடன் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பொதுவான 36 மாதங்களுக்கு பிறகு எந்த ஒரு விமான நிறுவனங்களும் கர்ப்பிணி பெண்களை விமானத்தில் அனுமதிப்பதில்லை, இந்நிலையில் இவர் எவ்வாறு பயணம் செய்தார், அந்த கர்ப்பிணி பெண் என்ன மாதத்தில் இருந்தார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.