முதல் முறையாக வெளியான நடிகர் கவுண்டமணியின் தாய் புகைப்படம்! நீங்க பாத்துட்டீங்களா?
Gowndamani mother photo
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் கவுண்டமணி. 1939 ஆம் ஆண்டு பிறந்த இவர் சர்வர் சுந்தரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனி ஒரு காமெடி நடிகராக நடித்துவந்த இவர் அதன்பிறகு செந்திலுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றும் பிரபலமானவை. குறிப்பாக கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், தங்கம், இந்தியன், நாட்டாமை, முறைமாமன் போன்ற படங்களில் கவுண்டமணி செய்துள்ள நகைச்சுவை யாராலும் மறக்கமுடியாத ஓன்று.
தற்போது 80 வயதாகும் இவர் புது முக நடிகர்களின் வருகை, வயதான காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் இவரது தாயார் அன்னம்மாள் கடந்த 2012 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். வீட்டு மாடிப்படியில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்ததில் அவரது கால் உடைப்பட்டது.
அதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார். இந்நிலையில் இதுவரை சமூக வலைத்தளங்களில் வெளிவராத அவரது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இவர்தான் கவுண்டமணியின் அம்மாவா என ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.