தலைவா.. மாஸ் ஓபனிங்குடன் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த பிரபலம்.! எண்டர்டெயின்மென்ட்க்கு பஞ்சமில்லை.!
தலைவா.. மாஸ் ஓபனிங்குடன் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த பிரபலம்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்த ஐந்து சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ஜி.பி.முத்து என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜி.பி.முத்து டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். தூத்துக்குடியில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அவர் யூடியூபில் ஏராளமான வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு பெருமளவில் பிரபலமானவர். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.