×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெறித்தனமாக மிரட்டும் டிரெய்லர் விரைவில்.. தங்கலான் படத்தின் முக்கிய அப்டேட்; ஜிவி பிரகாஷ் அசத்தல் தகவல்.!

வெறித்தனமாக மிரட்டும் டிரெய்லர் விரைவில்.. தங்கலான் படத்தின் முக்கிய அப்டேட்; ஜிவி பிரகாஷ் அசத்தல் தகவல்.!

Advertisement

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். கே.ஜி.எபில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

படத்தில் மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. படத்தின் முதற்பார்வை போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் விடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இதையும் படிங்க: போடுங்கடா வெடிய... எடுத்து வைங்க 1,000 கோடிய.!! வெளியான கங்குவா விமர்சனம்.!!

டிரைலர் அப்டேட் இதோ

இந்நிலையில், தங்கலான் படம் குறித்து தகவல் தெரிவித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "விக்ரமின் தங்கலான் படத்தில் பின்னணி இசைப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. நான் எனது சிறப்பான உழைப்புகளை வெளிப்படுத்தி இருக்கிறேன். படத்தின் ரிலீஸ் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். படத்தின் வெறித்தனமான ட்ரைலர் விரைவில் வெளியாகும் என நினைக்கிறன்" என கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thangalaan Movie #gv prakash #தங்கலான் #Thangalan movie update
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story