குடும்பமாக சேர்ந்து ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹன்ஷிகா: வைரல் வீடியோ இதோ.!
குடும்பமாக சேர்ந்து ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹன்ஷிகா: வைரல் வீடியோ இதோ.!
தமிழ் திரையுலகில் அடுத்த குஷ்பூ என்ற பெருமையை பெற்ற நடிகை ஹன்ஷிகா மோத்வானி. இவர் 2003ல் இருந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான படங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான எங்கேயும் காதல், மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் வாயிலாக தமிழுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ஹன்ஷிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, புலி, வாலு, அரண்மனை 2, மனிதன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
2020, 2021 ஆகிய வருடங்களில் எப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. 2022ல் ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் அவருக்கு 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு காதலர் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் குடும்பமாக ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.