தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.! ஹீரோ இவர்தானா?? வெளிவந்த லேட்டஸ்ட் சூப்பர் தகவல்!!

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.! ஹீரோ இவர்தானா?? வெளிவந்த லேட்டஸ்ட் சூப்பர் தகவல்!!

Harish kalyan going to act in dhoni production Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். மேலும் அவர் விவசாயம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

தோனி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் 'ரோர் ஆஃப் லயன்',  2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' (Blaze to Glory) போன்ற ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதல் தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளது. தோனியின் மனைவி சாக்ஷி எழுதிய கதையை ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

harish kalyan

இந்நிலையில் குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகும் இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க மாளவிகா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், பிற நடிகர் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#harish kalyan #dhoni #tamil movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story