அதிக மதிப்பெண்களுக்கு ஆசைபட்டு ஆசிரியர்களுக்கு விருந்தாகிய மாணவிகள்! ஒரு பகீர் ரிப்போர்ட்!
Haryana lab assistant misused college girls for marks

ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி அவர்களை கல்லூரி பேராசிரியர்களுக்கு விருந்தாக்கியுள்ளார் அந்த கல்லூரியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் ஒருவர்.
இந்நிலையில் மாணவி ஒருவர் ஆய்வக உதவியாளர் தன்னை பாலியல் இச்சைக்கு அழைத்து பேசுவதை செல்போனில் பதிவு செய்து காவல்துறையில் சமர்ப்பித்துள்ளார். மேலும் மாணவியின் புகாரின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் உட்பட மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை விசாரித்ததில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவிகளை வரவைத்து வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி அவர்களை பேராசிரியர்களுக்கு விருந்தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், அதிக மதிப்பெண்களுக்காக ஒருசில பெண்கள் தாங்களாகவே பேராசிரியர்களின் இச்சைக்கு படிந்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.