×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

VJ சித்ராவின் தற்கொலை வழக்கு... திடீரென ஹேம்நாத்துக்கு எதிராக மாறிய நண்பர்... என்ன நடந்தது!!

VJ சித்ராவின் தற்கொலை வழக்கு... திடீரென ஹேம்நாத்துக்கு எதிராக மாறிய நண்பர்... என்ன நடந்தது!!

Advertisement

விஜே சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அன்று ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் தற்போது ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நெருங்கிய நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின்போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஹேம்நாத்தால் தன்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பணம் மற்றும் அடியாட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்திரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இதுதொடர்பாக ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hemnath #Cancel bail #Hemnath friend request
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story