இளம் ஹீரோவின் லவ் டார்ச்சர்.! ஹீரோயின் தாயார் கூறியதை கேட்டு புலம்பித் தள்ளும் தயாரிப்பாளர்!!
hero love torture to young herine

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் பாலா இவரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் நந்தன் சுப்புராயன். இவர் தற்பொழுது மயூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற அஸ்மிதா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அமுதவாணன் என்பவர் புதுமுக நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவுற்ற நிலையில் படம் வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . மேலும் படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக படத்தின் தயாரிப்பாளர் ஹீரோயின் அஸ்மிதாவை அழைத்துள்ளார்.
அப்பொழுது ஹீரோயினின் அம்மா என் மகள் கோடீஸ்வரி. அவளுக்கு படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஹீரோ லவ் டார்ச்சர் கொடுத்துவருகிறார். இனி என் மகளை அந்த ஹீரோ வரும் இடத்திற்கு அனுப்ப மாட்டேன் என கூறி மறுத்துவிட்டாராம்.
மேலும் ஹீரோயின் வராதபொழுது அங்கு நான் ஏன் வரவேண்டும் என ஹீரோவும் ப்ரமோஷன் விழாவிற்கு வர மறுத்துள்ளாராம். இந்நிலையில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இல்லாமல் எப்படி படத்தை புரமோட் செய்வது என தயாரிப்பாளர் புலம்பிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.