சாமியாராக வேடமிட்ட கவர்ச்சி நடிகை; குவியும் கொலை மிரட்டல்; பகீர் செயலால் பதறும் நடிகை.!
போலிச்சாமியாராக வேடமிட்ட கவர்ச்சி நடிகை; குவியும் கொலை மிரட்டல்; இந்துத்துவா ஆதரவாளர்கள் செயலால் பதறும் நடிகை.!
பாலிவுட்டில் சொற்ப அளவிலான தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை உர்பி ஜாவேத்.
பார்ப்பதற்கு வித்தியாசமான, கவர்ச்சியான உடைகளை தேர்வு செய்து அணிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் நடிகை உர்பி ஜாவேத், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிச்செல்வார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஹாலோவன் திருவிழாவுக்கு செல்ல இயலாத காரணத்தால், உர்பி மாறுபட்ட தோற்றத்தில் சாமியார் போல வேடமிட்டு இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிலர், உர்பியின் மெயிலுக்கு தங்களின் கொலை மிரட்டலை அனுப்பி வருகின்றனர். இதனால் பயந்துள்ள நடிகை, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.